ECONOMYMEDIA STATEMENT

சைபர் ஜெயா தமரின்  சதுக்கம் (Tamarind Square) தில் சிசிடிவியை அகற்றிய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்

சைபர் ஜெயா, ஆகஸ்ட் 14 – வியாழன் (ஆகஸ்ட் 11) Tamarind Square வணிக மையத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவை அகற்றி புதரில் வீசிய பொறுப்பற்ற செயலை செய்த நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஒரே நபர் காரின் மீது ஏறி, அதைத் திறக்க முயற்சிப்பது, பார்க்கிங் பகுதியில் மோட்டார்  சைக்கிள்களை அலசிப் பார்ப்பது, தீயை அணைக்கும் கருவியுடன் விளையாடுவது என இரண்டு தனித்தனி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

சிப்பாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரின் வான் யூசுப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 12 அன்று காலை 10.30 மணியளவில் Tamarind Square நிர்வாகத்தினர் சிசிடிவி அறையை சோதனை செய்தபோது கேமராக்களில் ஒன்று செயல்படாமல் இருப்பதை கண்டறிந்தனர்.

மற்ற சிசிடிவி காட்சிகள் மூலம், ஒரு நபர் சிசிடிவி கேமராவை அகற்றி கட்டிடத்திற்கு அருகிலுள்ள புதர்களில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

கேமரா பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட மீண்டும் பொருத்த பட்டதாகவும், சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.


Pengarang :