ECONOMYSELANGOR

ராஜா துன் ஊடா நூலகத்திற்கு பேராக் சுல்தான் வருகை  

ஷா ஆலம், ஆகஸ்ட் 15-இங்குள்ள ராஜா துன் ஊடா நூலகத்திற்கு பேராக் சுல்தான் நஸ்ரின் முய்சுடீன் ஷா நேற்று  வருகை புரிந்தார். அவரை சிலாங்கூர் சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்  வரவேற்றார்.

சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதாக சிலாங்கூர் அரச அலுவலகம் தனது முகநூல் பதிவில் கூறியது.

ராஜா துன் ஊடா நூலகத்திற்கு மேன்மை தங்கிய சுல்தான் நஸ்ரின் மேற்கொண்ட முதல் வருகை இதுவாகும். அவர் நூலகத்தில் உள்ள வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் பிரிவுகளைப் பார்வையிட்டார் என்று அந்த அந்த பதிவில்  கூறப்பட்டுள்ளது.

மேலும், சிலாங்கூர் ஆட்சியாளர் நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய சுமார் 2,470 புத்தகங்களைக் கொண்ட தனிப்பட்ட புத்தகத் தொகுப்பையும் பேராக் ஆட்சியாளர் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டார்.

புஸ்தகா ராஜா துன் ஊடா நூலகம் 2011 டிசம்பர் 10 ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. இது சுல்தான் ஷராபுதீடீன் சிந்தனையில் உருவான நூலகமாகும். தற்போதைய நிலவரப்படி, நூலகத்தில் மொத்தம் 360,000 புத்தகங்கள் உள்ளன. இதுவரை 76 லட்சத்து 80 ஆயிரம்  பார்வையாளர்கள் பதிவு இங்கு வருகை புரிந்துள்ளனர்.


Pengarang :