ECONOMYMEDIA STATEMENT

திருடிய கோதுமை மாவுடன் தப்பிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்

பாசிர் கூடாங், செப் 25: காரின் ஓட்டுநர் இருக்கை கண்ணாடியை உடைத்து வாகனத்தில் இருந்து ஒரு பெட்டி கோதுமை மாவை எடுத்துக் கொண்டு ஓடிய உள்ளூர் நபர், நேற்று அதிகாலை இங்குள்ள தாமான் கோத்தா மாசாய் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.

நள்ளிரவு 1.15 மணி அளவில் நடந்த இந்தச் சம்பவத்தை பாதிக்கப் பட்டவரின் பக்கத்து வீட்டுக்காரர்,  திருடிய பொருளுடன் 31 வயது நபர் தப்பி ஒட முயன்றதை கண்டதாக  ஸ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரண்டண் முகமட் சோஹைமி இஷாக் கூறினார்.

எவ்வாறாயினும், 30 வயதான  கார் உரிமையாளரும். அவரது அண்டை வீட்டாரும் சேர்ந்து, அந்த நபரை துரத்தி, ஜாலான் புலாசனைச் சுற்றி பூங்கா பகுதியில் அவரை பிடிக்க முடிந்தது என்று அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் பின்னர், சம்பந்தப்பட்ட நபரை திருட்டு உபகாகாரணம் மற்றும்  வாகனம்  சரிசெய்யக்கூடிய ஸ்பானருடன்ருடன் காவல்துறையிடம் ஒப்படைத்தார்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (கேபிஜே) பிரிவு 117 இன் கீழ் அந்த நபர் இன்று முதல் மூன்று நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளான் என்று முகமட் சோஹைமி கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 427/379 இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.


Pengarang :