ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பிரதமரும்  நிதி அமைச்சருமாக  டத்தோ ஸ்ரீ  அன்வார் இப்ராஹிம், துணை பிரதமராக டத்தோ ஸ்ரீ  டாக்டர்  அஹ்மட் சாஹிட் ஹமிடி , டத்தோ ஸ்ரீ பாட்சிலா யூசோப்

கோலாலம்பூர் டிச 2 ;- கடந்த 19-11-2022 நாட்டின் 15வது பொதுத் தேர்தல் முடிந்த பின் ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்ற நிலைமை சீர்செய்து மாமன்னர் மற்றும்  அரச கவுன்சில் ஒரு மித்த  இணக்கத்துடன், ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க மாமன்னர் ஆலோசனை  வழங்கினார்

அதனை ஒரு பிரிவு மறுத்த  வேளையில் நீண்ட நாட்களாக நாட்டின் சீரழிவுகளை  சுட்டிக்காட்டி போராடி வரும்  டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவால்மிக்க இப்பணியை ஏற்றுக் கொண்டார்.

அதுமுதல் அந்த அரசாங்கத்தின் கொள்கை எப்படி இருக்கும், எத்தனை துணைப் பிரதமர்கள்?  யார் துணை பிரதமர்? எத்தனை அமைச்சர்கள் , யார்  அவர்கள் என்று  அடுக்கடுக்கான கேள்விகளுக்கு  இன்றைய பிரதமர் 5.00 மணிக்கு  பதிலளிப்பார் என்று இன்று முழுவதும் காத்திருந்த  மக்களுக்கு  மாலை 5.00 காலக்கெடு  ஏமாற்றத்தை தந்தது.

இன்று இரவு 8.15  மணிக்கு பிரதமர்  அறிவித்த  முக்கிய  அமைச்சர்கள் பிரதமரும்  நிதி அமைச்சருமாக  டத்தோ ஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் , துணை பிரதமராக டத்தோ ஸ்ரீ  டாக்டர்  அஹ்மட் சாஹிட் ஹமிடி  மற்றும்  2வது துணை பிரதமராக டத்தோ ஸ்ரீ பாட்சிலா யூசோப்  ஆகியோர்  அறிவிக்கப் பட்டனர்.

செய்திகள்  தொடரும்.


Pengarang :