HEALTHNATIONAL

நாடு முழுவதும் கோவிட்-19 இன் புதியச் சம்பவங்கள் 14.2 சதவீதம் குறைந்துள்ளன

கோலாலம்பூர், ஜன 9: ஜனவரி 1 முதல் 7 வரையிலான தொற்றுநோய் வார 1யில் (ME 1/2023) நாடு முழுவதும் கோவிட்-19 இன் புதியச் சம்பவங்கள் 14.2 சதவீதம் குறைந்து 3,231 ஆக உள்ளது. முந்தைய தொற்றுநோய் வாரத்தில் 3,767 சம்பவங்கள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ME1/2023 கான உள்ளூர் சம்பவங்களின் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்து 3,735யிருந்து 3,213 ஆகவும், வெளிநாட்டவரால் ஏற்பட்ட சம்பவங்கள் 43.8 சதவீதம் குறைந்து 32 லிருந்து 18 ஆகவும் உள்ளதாகச் சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“ME 1/2023 இல் குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 35.6 சதவீதம் குறைந்துள்ள வேளையில் இறப்பு சம்பவங்களின் எண்ணிக்கையும் 4.5 சதவீதம் குறைந்துள்ளதாக அவர் இன்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, ஜனவரி 25 2020 (ME 4/2020) முதல் கடந்த ஆண்டு ஜனவரி 7 வரை 5,029,908 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட அதே நேரத்தில் 4,981,975 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 36,874 இறப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

ஒன்பது கிளஸ்டர்கள் இன்னும் செயலில் உள்ள நிலையில் 7,167 கிளஸ்டர்கள் ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

. – பெர்னாமா


Pengarang :