ANTARABANGSA

வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளின் கோவிட்-19 சோதனை மாதிரிகள் சீனா ஆய்வு செய்யும்

பெய்ஜிங், ஜன 9- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டினருக்கு மூடப்பட்ட தனது எல்லைகளைச் சீனா நேற்று மீண்டும் திறந்துள்ளது.

தங்கள் நாட்டுக்கு வரும் கோவிட்-19 நோயாளிகளின் திரிபுகளைக் கண்டறிவதற்காக அவர்களின் கொரோனா சோதனை மாதிரிகளை அந்நாடு ஆய்வுக்குட்படுத்த உள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வாயிலாக நாட்டிற்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் சோதனை மாதிரிகள் மருத்துவமனைகளில் இருந்து திரட்டப்பட்டு வைரஸ் பிறழ்வுகளை கண்டறிவதற்காக டி.என்.ஏ. சோதனை மேற்கொள்ளப்படும் என நோய்க் கட்டுப்பாட்டு புதிய செயல்முறைக்கான மன்றம் தெரிவித்தது.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான கடுமையான அறிகுறிகளைக் கொண்ட வெளி நோயாளிகள், நோயாளிகள் மற்றும் நோய்த் தொற்றால் இறந்தவர்களின் புதிய தொற்றுகள் தொடர்பான சாத்தியங்களைக் கண்டறிவதற்காக உடனடியாக தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான தொற்று நோயியில் கழகத்திற்கு உடனடியாக கொண்டுச் செல்லப்படுவர் என்று அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான நடவடிக்கைகளை தளர்த்துவதற்கான கொரோனா வைரசை ஏ பிரிவிலிருந்து பி பிரிவுக்கு தரம் குறைக்கும் நடவடிக்கையைச் சீனாவின் தேசியச் சுகாதார ஆணையம் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மேற்கொண்டது.


Pengarang :