ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

சுகாதார அமைச்சின் அங்கீகாரம் இல்லாத அழகு சாதனப் பொருள்கள் பறிமுதல்

ஷா ஆலம், ஜன 12- இங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா கடந்த வாரம் மேற்கொண்ட  நடவடிக்கையில் சுகாதார அமைச்சின் அங்கீகார எண் இல்லாத சுமார் 58,000 வெள்ளி மதிப்பிலான அழகு சாதனப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநில சுகாதாரத் துறையின் மருந்தக அமலாக்கப் பிரிவு மேற்காண்ட அந்நடவடிக்கையில் அந்த அழகு சாதனப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் டத்தோ டாக்டர் சஹாரி ஙகாடிமான் கூறினார்.

சுகாதார அமைச்சின் மருந்து கட்டுப்பாட்டு அமலாக்கத் தரப்பின் அங்கீகார எண் இன்றி விற்பனை செய்யப்படும் அழகு சாதனப் பொருள்கள் குறித்து பொது மக்கள் வழங்கிய புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

சருமத்தை முதுமையின் பாதிப்பிலிருந்து மீட்க உதவும் எனக் கூறப்படும் இந்த இந்த அழகு சாதனப் பொருளை சந்தைப் படுத்துவதற்கு அக்குமபல் இணையத்தை பயன்படுத்தி வந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த பறிமுதல் தொடர்பில் 1952ஆம் ஆண்டு மருந்து விற்பனைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும என்றார்.

சந்தேகத்திற்கிடமான பொருள்களின் விற்பனை தொடர்பில் தங்கள் தரப்புக்கு புகார்களை அளித்து உதவுமாறு பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :