ANTARABANGSANATIONAL

சுலாவேசியில் நிலநடுக்கம்- மலேசியாவுக்குச் சுனாமி அபாயம் இல்லை

கோலாலம்பூர், ஜன 18- இந்தோனேசியாவின் சுலோவேசியின் மினாஹசா
தீகபற்பத்தை ரிக்டர் அளவில் 6.3 எனப் பதிவான வலுவான நிலநடுக்கம்
இன்று காலை 8.34 மணியளவில் உலுக்கியது.

இந்தோனேசியாவின் கோரோன்தாலோவிலிருந்து 69 கிலோ மீட்டர் தென்
கிழக்கில் 146 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக
மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

எனினும், தொடக்க மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த பூகம்பத்தால்
மலேசியாவுக்குச் சுனாமி அபாயம் ஏற்படும் வாய்ப்பில்லை என அத்துறை
அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.


Pengarang :