ANTARABANGSA

பிப்ரவரி 7ஆம் தேதி பதவி துறக்கிறார் நியுசிலாந்து பிரதமர்

வெலிங்டன், ஜன 19- நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளதாக ஜெர்மன் செய்தி 
நிறுவனமமான டி.பி.ஏ. தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற  2023 ஆம் ஆண்டின் முதல் செய்தியாளர் சந்திப்பின் போது இந்த 
அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை ஜெசிந்தா வெளியிட்டார்.

எங்களால் முடிந்த அனைத்தையும் வழங்கி விட்டோம். என்னைப் பொறுத்தவரை ராஜினாமா செய்ய வேண்டிய வந்துவிட்டது என்று அவர் கூறினார்.
புதிய பிரதமர் பதவியேற்ற பிறகு ஜெசிந்தாவின் ராஜினாமா அமலுக்கு வருகிறது. தொழிற்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தனது 37வது  வயதில் ஜெசிந்தா  பிரதமராக 
நியமிக்கப்பட்டார்.  அரசாங்கத்தை வழிநடத்தும் உலகின் இளைய பெண்மணி இவர் 
ஆவார்.

இந்த ஆண்டுக்கான தேர்தல் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறும் என்றும் ஜெசிந்தா 
அறிவித்தார்.

Pengarang :