ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பிரத்தியேகச் சிறார்களுக்கான பாலர் பள்ளித் திட்டம் புறநகர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்

ஷா ஆலம், ஜன 27- இவ்வாண்டு தொடக்கத்தில் அமலாக்கம் கண்ட சிலாங்கூர் பிரத்தியேகச் சிறார்களுக்கான பாலர் பள்ளித் திட்டம் (அனிஸ்) ரவாங், கோல சிலாங்கூர், லோ லங்காட் போன்ற புறநகர்ப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

கட்டணமில்லா இந்த சிறப்புக் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அனைத்து நிலையிலான மக்களுக்கும் நட்புறவான மற்றும் நலன் காக்கும் மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதை உறுதி செய்ய இயலும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூரில் பிறந்த  ஐந்து மற்றும் ஆறு வயதுடைய தாமதமான வளர்ச்சி கொண்ட, டவுன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள மற்றும் ஹைப்பர்ஹெக்டிவ் எனப்படும் அதிதீவிர சுறுசுறுப்புள்ள பிள்ளைகளுக்கான தினசரி பராமரிப்பு மையமாக இது செயல்படும் என அவர் சொன்னார்.

மாற்றுத் திறானளி மாணவர்களுக்கு உரிய கல்வி வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் அனிஸ் பாலர் பள்ளி மையம் அண்மையில் தொடங்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

பிரத்தியேகச் சிறார்களுக்கான சிறப்பு கல்வி சூழியல் முறையைக் கொண்டுள்ள ஒரே மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

இங்குள்ள செக்சன் 7ல் ,  12 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி செலவில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அனிஸ் பாலர் பள்ளியை அமிருடின் கடந்த 12ஆம் தேதி திறந்து வைத்தார்.

 


Pengarang :