ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலத்தின் நிலைத்தன்மையும் சுபிட்சமும் அடித்தளம்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜன 29- அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் நிலைத்தன்மை மற்றும் சுபிட்சத்தைக் கட்டிக்காப்பதில் சிலாங்கூர் அடைந்துள்ள வெற்றி அடித்தளமாக விளங்குகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த மூன்றாம் காலாண்டில் 2 கோடியே 57 லட்சம் வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை சிலாங்கூர் ஈர்த்துள்ளது இந்த வெற்றிக்கான சான்றாக விளங்குறது என்று அவர் சொன்னார்.

இது தவிர, மாநில அரசு 970 கோடி வெள்ளி மதிப்பிலான 199 தொழில் துறை திட்டங்களை ஈர்த்துள்ளது. இதன் மூலம் 11,600 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலாங்கூரை தங்களின் தங்களின் தேர்வுக்குரிய இடமாகத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்கள் மாநிலத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை முக்கிய காரணமாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசின் சிறப்பான நிர்வாக முறை மற்றும் அரசுக்கு மக்கள் தொடர்ந்து வழங்கி வரும் வற்றாத ஆதரவு ஆகியவை இந்த அடைவு நிலையை அடைவதற்குரிய காரணங்களாக விளங்குகின்றன என்றார் அவர்.

இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற ஆடிட்ரோரியத்தில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான சீனப்புத்தாண்டு கொணட்டாட்ட நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் நோராஷிகின் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமிருடின், இந்த 2023ஆம் ஆண்டு மாநில மக்கள் அனைவருக்கும் சிறப்பான, வளப்பம் நிறைந்த மற்றும் அமைதியைத் தரும் ஆண்டாக தொடர்ந்து விளங்கும் எனத் தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :