Malaysia, Penang, Thaipusam, Hindu, religious, festival, people, silver chariot,
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டு பினாங்கு தைப்பூச விழாவில் 15 லட்சம் பக்தர்கள் திரள்வர்

ஜோர்ஜ் டவுன், ஜன 29- இவ்வார இறுதியில் பினாங்கில்
நடைபெற விருக்கும் தைப்பூச விழாவில் பக்தர்கள் மற்றும் உள்நாட்டு,
வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் உள்பட சுமார் 15 லட்சம் பேர் கலந்து
கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக
இந்த தைப்பூச விழா மிதமான அளவில் கொண்டாடப் பட்டதாக தண்ணீர்
மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தின் தலைவர் டத்தோஸ்ரீ பி.
குவண ராஜூ கூறினார்.
இந்த மூன்று நாள் விழாவில் கிட்டத்தட்ட 15 லட்சம் பக்தர்கள் கலந்து
கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஈராண்டுகளாகத் தடைபட்டுப
போன நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்கு இவ்வாண்டில் அதிகமானோர்
வருவர் என எதிர்பார்க்கிறோம். அதனால் இம்முறை இந்த விழாவை
சிறப்பான முறையில் நடத்துவது எங்களுக்கு சவால்மிக்க பணியாக
இருக்கும் என்று அவர் சொன்னார்.
இந்த ஆண்டில் தைப்பூச விழா வார இறுதியில் கொண்டாடப்படுகிறது.
அதனால் திங்கள்கிழமையும் பொது விடுமுறையாக இருக்கும். இதன்
காரணமாக தைப்பூசத்தை கொண்டாடுவதற்கு உள்நாட்டிலிருந்து
மட்டுமின்றி மேடான், ஜாகர்த்தா, சிங்கப்பூரிலிருந்தும் பக்தர்கள்
வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கடந்த காலங்களில் லண்டனில்
இருந்துகூட பக்தர்கள் வந்துள்ளனர் என்று பெர்னாமாவுக்கு அளித்த
பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
தங்க இரதம் லெபோ குயினிலிருந்து வரும் 4ஆம் தேதி அதிகாலை 6.00
மணிக்கு புறப்பட்டு அன்றிரவு தண்ணீர் மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி
ஆலயம் வந்தடையும் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்தார்.
இந்த தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஏதுவாக பொது மக்கள்
கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளும்படி அவர்
கேட்டுக் கொண்டார்.

Pengarang :