ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வழக்கறிஞர்  டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் காலமானார்

கோலாலம்பூர், ஜன 29- மூத்த அரசுத் தரப்பு வழக்கறிஞரான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் தனது 79வது வயதில் இன்று காலமானார்.

முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியான அவர் காலமானதை  துணை அரசு வழக்கறிஞர் முகமது முஸ்தபா பி குனியாலம்  பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.

ஆம் உண்மை. இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று மதியம் 12.15 மணியளவில் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.

நுரையீரல் தொற்று காரணமாக ஸ்ரீராம் கடந்த வாரம் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1எம்டிபி) ஊழல் வழக்கில் ஸ்ரீ ராம் தலைமை வழக்கறிஞர் ஆவார்.

சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு சோலார் ஹைப்ரிட் திட்டம் மற்றும் பணமோசடி ஆகியவற்றில் ஈடுபட்ட நஜிப்பின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு அவர் தலைமை வழக்கறிஞராகவும் உள்ளார்.

Pengarang :