ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

பாத்தேக்கை பிரபலப்படுத்தும் முயற்சியாக கினபாலு மலையை அடைந்து சிப்பாங் நகராண்மைக் கழக பணியாளர்கள் சாதனை

ஷா ஆலம், ஜன 29- சிப்பாங் நகராண்மைக் கழகத்தைச் சேர்ந்த 36 பணியாளர்கள் நேற்று கினபாலு  மலையின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர். சிலாங்கூர் பாத்தேக்கை பிரபலப்படுத்தும் முயற்சியாக அவர்கள் இந்த மலையேறும் திட்டத்தை மேற்கொண்டனர்.

சிப்பாங் நகராண்மைக் கழக பணியாளர்கள் கினபாலு மலையில் ஏறுவது இது இரண்டாவது தடவையாகும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்து ஹமிட் ஹூசேன் கூறினார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட “சிப்பாங்கிற்கு வருகை தாருங்கள்“ இயக்கத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் அவ்வாண்டில் மலையேறும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டோம். இம்முறை சிலாங்கூர்  பாத்தேக்கை பிரபலப்படுத்தும் அதே வேளையில் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் நோக்கிலும் இந்த முயற்சியை மேற்கொண்டோம் என்று அவர் சொன்னார்.

 நுட்பமும் கலை நயமும் கொண்ட சிலாங்கூர் பாத்தேக்கை சபா மற்றும் சரவா மாநில மக்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் கினபாலு மலையைத் தாங்கள் தேர்ந்தெடுத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த மலையேறும் குழுவில் இடம் பெற்றிருந்த இரு ஆர்.டி.எம். பணியாளர்கள் இந்த இக்குழுவினரின் மலையேறும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் வெளியிட்டு வந்தனர்.


Pengarang :