ADN Batu Tiga Rodziah Ismail (kanan) menyantuni penerima vaksin Covid-19 dalam program Vaksin Selangor (Selvax) bergerak DUN Batu Tiga di Dewan Majlis Bandaraya Shah Alam (MBSA) pada 13 September 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENT

கோவிட்-19 நோய்த் தொற்றினால் 258 பேர் பாதிப்பு- இருவர் மரணம்

ஷா ஆலம், ஜன 29- நாட்டில் நேற்று 258 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 35 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் 9,496 பேர் கோவிட்- நோய்த் தொற்றின் தீவிர பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 104 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை அடுத்து கோலாலம்பூரில் 51 பேரும் புத்ராஜெயாவில 22 பேரும் ஜொகூர் மற்றும் சரவாவில் தலா 17 பேரும் பேராக்கில் 14 பேரும் பினாங்கில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மலாக்காவில் அறுவருக்கும் நெகிரி செம்பிலானில் ஐவருக்கும் திரங்கானுவில் மூவருக்கும் கிளந்தான், பெர்லிஸ், சபா மற்றும் லபுவானில் தலா ஒருவருக்கும் இந்நோய் கண்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய இரு மரணச் சம்பவங்கள நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து கடந்த 2020 பிப்ரவரி மாதம் கோவிட்-19 நோய்த் தொற்று பரவியது முதல் இதுவரை 36,940 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.


Pengarang :