ANTARABANGSA

சீனாவின் ஷின்ஜியாங் நகரை வலுவான நிலநடுக்கம் உலுக்கியது

பெய்ஜிங், ஜன 30- சீனாவின் உய்குர் ஷின்ஜியாங் சுயாட்சிப் பிரதேசத்தின் மேற்கே வடமேற்கே உள்ள கவுந்தி ஷாயா பகுதியை இன்று காலை வலுவான நில நடுக்கம் உலுக்கியது.

ரிக்டர் அளவில் 6.1 எனப் பதிவான அந்த நிலநடுக்கம் காலை 7.49 மணியளவில் ஏற்பட்டதாக சீனாவின் பூகம்ப ஒருங்கமைப்பு மையம் கூறியது.

இந்த பூகம்பம் வடக்கே 40.01 பாகையிலும் தீர்க்க ரேகையில் 82.29 பாகையிலும் 50 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையமிட்டிருந்ததாக ஷின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பெர்னாமா


Pengarang :