ANTARABANGSAMEDIA STATEMENT

ஈரானில் பூகம்பம்- மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

புத்ராஜெயா, பிப் 1- ஈரானை கடந்த வாரம் உலுக்கிய நில நடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் கடந்த மாதம் 28ஆம் தேதி  வடமேற்கே கோய் நகருக்கு அருகே ஏற்பட்டது.

மூவர் உயிரிழப்பதற்கும் 800க்கும் மேற்பட்டோர் காயமடைவதற்கும் காரணமாக இந்த நிலநடுக்கத்தின் ஆகக்கடைசி நிலவரங்களை அந்நாடடிலுள்ள மலேசியத் தூதரகம் அணுக்கமாக கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா கூறியது.

இந்த பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  மலேசியா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

அந்நாட்டில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதால் அங்கு வசிக்கும் மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் அதே வேளையில் அதிகாரிகள் வெளியிடும் வழிகாட்டியை பின்பற்றி நடக்கும்படி அது கேட்டுக கொண்டது.

அண்மைய சில மாதங்களாக கடுமையான மற்றும் மிதமான தாக்கத்தைக் கொண்ட நிலநடுக்கங்கள் ஈரானின் தெற்கு மற்றும் வடக்கு பிரதேசங்களை உலுக்கி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2013ஆம் ஆண்டு பாம் நகரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 34,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :