ECONOMYMEDIA STATEMENT

ஓப் செலாமாட்-  சிலாங்கூரில் சாலை விபத்துகள் 40 விழுக்காடு அதிகரிப்பு

ஷா ஆலம், ஜன பிப் 1- சீனப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த மாதம் 18 முதல் 27 வரை மேற்கொள்ளப்பட்ட 19வது ஓப் செலாமாட் நடவடிக்கையின் போது சிலாங்கூரில் 4,042 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஏற்பட்ட 2,810 விபத்துகளுடன் ஒப்பிடுகையில் 43.8 விழுக்காடு அதிகரிப்பை இது காட்டுகிறது என்று சிலாங்கூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி கூறினார்.

இந்த விபத்துகளில் 17   மரணமடைந்த வேளையில் இருவர் கடுமையான காயங்களுக்கும் மேலும் 25 பேர் லேசான காயங்களுக்கும் ஆளானதாக அவர் தெரிவித்தார்.

இக்காலக்கட்டத்தில் பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் 527 விபத்துகளும் ஷா ஆலமில் 471 விபத்துகளும் காஜாங்கில் 433 விபத்துகளும் பதிவு செய்யப்பட்டன. பொது மக்கள் சாலை பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் அலட்சியப் போக்குடன் இருப்பதை இது காட்டுகிறது என்று பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஓப் செலாமாட் நடவடிக்கையின் போது பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக  மொத்தம் 28,792 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

எனினும், கடந்த 17வது ஓப் செலாமாட் பாதுகாப்பு இயக்கத்தின் போது வழங்கப்பட்ட 51,753 குற்றப்பதிவுகளுடன் ஒப்பிடுகையில் இது 44.4 விழுக்காடு அல்லது 22,691 சம்மன்கள் குறைவாகும் என்றார் அவர்.

வாகனமோட்டிகள் அதிகம் புரிந்த குற்றங்களில் அதிக வேகத்தில் வாகனத்தைச் செலுத்தியது, இரட்டைக் கோடுகளில் முந்திச் சென்றது, வாகனம் ஓட்டும் போது கைப்பேசியைப் பயன்படுத்தியது, சமிக்ஞை விளக்கை மீறிச் சென்றது மற்றும் அவசரத் தடத்தில் பயணித்தது ஆகியவையும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

இக்காலக் கட்டத்தில் மாநிலத்தின் 16 பகுதிகளில்  குற்றச் செயல்கள் தொடர்பில் 357 புகார்கள் செய்யப் பட்டன. அவற்றில் 280 புகார்கள் சொத்து தொடர்பான குற்றங்களாகவும் எஞ்சியவை பலாத்காரம் தொடர்புடைய குற்றங்களாகவும் விளங்குகின்றன என்றார் அவர்.

து மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகளை நிர்மாணிப்பது நடப்பிலுள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும்  பேசப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் கூட்டரசு நிலையில் குறிப்பாக வரும் பிப்வரி 24ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2023 வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :