எதிர்வரும் சனிக்கிழமை ஶ்ரீ செர்டாங் தொகுதியில் மலிவு விற்பனை

ஶ்ரீ செர்டாங், பிப் 2: 4 பிப்ரவரி சனிக்கிழமை அன்று ஶ்ரீ செர்டாங் தொகுதியில் மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தில் கீழ் மலிவு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விற்பனை தாமான் பிங்கிரான் புத்ராவில் உள்ள சூராவ் நூருள் இக்லாஸா வளாகத்தில் காலை மணி 10 தொடங்கி நண்பகல் மணி 1 வரை நடைபெறும்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (பிகேபிஎஸ்) நடத்தப்படும் இந்த மலிவு விற்பனை, மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயனடையும் இந்த மலிவான விற்பனைத் திட்டம் ஜனவரி 15 முதல் மார்ச் வரை ஒவ்வொரு நாளும் 11 இடங்களில் நடத்தப்படுகிறது.

பொதுமக்கள் அவ்வப்போது விற்பனை இடங்களைப் பற்றிய அறிய linktr.ee/myPKPS என்ற இணைப்பைப் பார்வையிடலாம்.


Pengarang :