SELANGOR

பொது வசதிகளைச் சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை- உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் எச்சரிக்கை

ஷா ஆலம், பிப் 2- உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் பொது வசதிகளை எந்த தரப்பினரும் சேதப்படுத்துவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை 
எடுக்கப்படும்.

கோல குபு பாரு மினி ஸ்டேடியம் பகுதியில் வாகனங்களை நிறுத்தி மைதானத்தின் மேற்பரப்பையும் பந்தயத் தடத்தையும் சேதப்படுத்திய ஒரு சில நபர்களின் நடவடிக்கை  குறித்து தாங்கள் வருத்தம் அடைந்துள்ளதாக நகராண்மைக் கழகம் முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் கூறியது 

பொறுப்பற்ற நபர்களின் சுயநலப் போக்கு காரணமாகப் பழுதுபார்க்கும் பணிகளுக்குக் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் நகராண்மைக் கழகத்திற்கு 
ஏற்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

இந்த பொறுப்பற்ற  நடவடிக்கை ஓய்வு நோக்கங்களுக்காக மற்றும் பல்வேறு 
தேவைகளுக்காக இந்த வசதியைப் பயன்படுத்த விரும்பும் பிற பயனர்களுக்குச் 
சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக மைதானத்தின் அருகே வாகன நிறுத்துமிடத்தைத் தாங்கள் தயார் செய்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

உலு சிலாங்கூர் மக்கள் அனைவருக்கும் சொந்தமான பொது வசதிகளைச் 
சேதப்படுத்தும் எந்த ஒரு தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கத் 
தயங்குவதில்லை என்றும் நகராண்மைக் கழகம் எச்சரித்தது.

Pengarang :