ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல சிலாங்கூர்  ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய  தைப்பூசம் சிறப்பாக நடந்தேற நகராண்மை கழகமும்  போலீஸ் படையும்    முழு ஒத்துழைப்பு. வழங்கியது

கோலசிலாங்கூர்  படம்  செய்திகள்  சுப்பையா சுப்ரமணியம்.
கோல சிலாங்கூர் .பிப்-5,  கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச திருவிழா சிறப்பாக நடந்தேற  நகராண்மை கழகமும்  போலீஸ் படையும் முழு ஒத்துழைப்பு வழங்கியது.  ஆலய வளாகம் தூய்மையை தொடர்ந்து கட்டிக் காக்கும் கடமையில் நகராண்மைக் கழகத்தின் ஆலய வட்டார குத்தகையாளர் தீவிரமாக பணியாற்றினார்கள். ஆலய வளாகத்தில் போடப்பட்டிருந்த குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்த பின்னர் அதனை உடனுக்கு உடன் அகற்றி கொண்டிருந்தனர்.
இதே போல் பக்தர்கள் ஆற்றங்கரையிலிருந்து ஆலயத்திற்கு தங்களது நேர்த்திக் கடனை எடுத்து செல்ல ஏதுவாக சாலை ஓரத்தை சுத்தம் செய்து வைத்தனர்.
ஆனால் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களில் ஒரு சிலர் தங்களது வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்தனர். இதனால் பக்தர்கள் சாலையில் நடந்து வர வேண்டியிருந்தது.
ஆனால் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் வராத வண்ணம் சாலை தடுப்பை போட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பை கோல சிலாங்கூர் மாநகர் மன்றமும் மாவட்ட போலீஸ் துறையும் இணைந்து நற்சேவை யாற்றியது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் ஆலய நுழை வாசலில் நுழைய போக்குவரத்து போலீசார் முழு நேர பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆலய வளாகத்தில் சீருடை அணிந்த போலிசார்களும் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆலய வளாகம் பாதுகாப்பானதாக அமைய போலீசார் தங்களது கடமையை சீரும் சிறப்புமாக செய்து கொண்டிருந்தனர்.
மேலும் ஆலயத்திக்க்ய் முன் புரம் உள்ள கோல சிலாங்கூர் சாலையில் போக்குவரத்து நெரிசலையும் முறையாக கண்காணித்துக் கொண்டனர். ஆக மொத்தத்தில் தைப்பூச கொண்டாத்தை வெற்றி கரமாக இந்துக்கள் கொண்டாட கோல சிலாங்கூர் நகராண்மை கழகம் கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் படையும் சிறப்பாக சேவையாற்றிய என்றால் அது மிகையாகாது.

Pengarang :