ECONOMY

காஜாங் தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெ.500,000  ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்

உலு லங்காட், பிப் 6- சிலாங்கூர் பென்யாயாங் 2.0 திட்டத்தில் பழுதடைந்த மற்றும் நீண்ட காலமாக சீர் செய்யப்படாத அடிப்படை வசதிகளுக்கு காஜாங் சட்டமன்றத் தொகுதி முன்னுரிமை அளிக்கும்.

மாநில சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கான அந்த 500,000 வெள்ளி ஒதுக்கீட்டை கொண்டு இந்த பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்தும் பணி தொடங்கப்படும் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

நீண்ட காலமாக சீர் செய்யப்படாமல் இருக்கும் அடிப்படை வசதிகளோடு சாலைகளைச் செப்பனிடுவது மற்றும் பள்ளிகளில் கூரைகளை சரி செய்வது போன்ற பணிகளை வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேற்கொள்ளவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தில் மலிவு விலை அடுக்குமாடி வீடுகளுக்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்க உள்ளோம். சில குடியிருப்பு பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வர்ணம் பூச படவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்றார் அவர்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற காஜாங் சாப் கோய் மேய் கலாசார மற்றும் பாரம்பரிய நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் முதல் கட்டத்தில் ஒதுக்கப்பட்ட பத்து லட்சம் வெள்ளி மானியத்தில் தொடங்கப்பட்ட சில திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹீ லோய் சியான் குறிப்பிட்டார்.

பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய சிறு திட்டங்களை அமல் செய்வதன் மூலம் வட்டார பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டும் நோக்கில சிலாங்கூர் பென்யாயாங் திட்ட அமலாக்கத்திற்காக  மாநில அரச 2 கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 500,000 வெள்ளி மானியம் வழங்கப்பட்டது.


Pengarang :