ECONOMY

ஜாவா தீமோர் கவர்னருடன் மந்திரி புசார் சந்திப்பு- முதலீடு, உணவு விநியோகம் குறித்து பேச்சு

ஷா ஆலம், பிப் 6- ஜாவா தீமோர் கவர்னருடன் தொழில் துறை தொடர்பான பல்வேறு விவகாரங்களை விவாதிப்பதற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்தோனேசியா சென்றுள்ளார்.

சுராபாயாவிவில்  நடைபெற்ற கவர்னர் கோஃபிபா இண்டார் பாராவன்சாவுடனான அந்த சந்திப்பின் போது உணவு விநியோகம் மற்றும் முதலீடு குறித்து அவர் பேச்சு நடத்தினார்.

சுராபாயா நகருக்கான இந்த அதிகாரப்பூர்வ வருகையின் தொடக்கமாக ஜாவா தீமோர் கவர்னர் கோஃபிபா இண்டார் பாராவன்சாவுடன் சந்திப்பு நடத்தினேன். 

இந்த சந்திப்பின் போது தொழில்துறை தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் பேச்சு நடத்தினோம். குறிப்பாக பண வீக்கம் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்கும் வகையில் உணவு விநியோகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதித்தோம் என அமிருடின் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்புக்கு பெருமனதுடன் அனுமதி வழங்கியதோடு பேச்சுவார்த்தையில் இடம் பெற்ற விவகாரங்களில் ஒத்துழைப்பு நல்க இணக்கம் தெரிவித்த அந்த தலைவருக்கு  தாம் நன்றிக் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :