ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கத்தில் 44,218 பேர் உயிரிழந்துள்ளனர்

இஸ்தான்புல், பிப் 25: தெற்கு துருக்கியில் பிப்ரவரி 6-ம் தேதி ஏற்பட்ட இரண்டு
சக்தி வாய்ந்த நில நடுக்கங்களின் விளைவாக குறைந்தது 44,218 பேர் இறந்துள்ளதாக
அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட 335,400 கூடாரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், 11,400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்னும் சம்பவ இடத்தில் தேடல் மற்றும்
மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உளவியல் ஆதரவு சேவைகளை வழங்குவதற்காக கஹ்ராமன் மாராஸ், ஹதாய்,
ஒஸ்மானியா மற்றும் மாலத்யா ஆகிய இடங்களில் நான்கு நடமாடும் சமூகச் சேவை
மையங்கள் நிறுவப்பட்டன. இதுவரை சுமார் 912,000 பேர் உளவியல் சமூக ஆதரவைப்
பெற்றுள்ளனர்.

– பெர்னாமா


Pengarang :