NATIONAL

My50 மாதாந்திர பாஸ் திட்டத்தில் 180,000 பேர் பயனடைந்தனர்

ஷா ஆலம், பிப் 25: பிரசரணாவின் கீழ் My 50 மாதாந்திர பாஸ்  திட்டமானது கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் போக்குவரத்துச் செலவைக் குறைக்கிறது.

பிரதமர் பட்ஜெட் 2023 ஐ சமர்பிக்கும்போது, இந்த திட்டத்தில் ரயில் மற்றும் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தும் கிட்டத்தட்ட 180,000 பேர் பயனடைந்தனர் என்று கூறினார்.

“மேலும், இடைவிடாத பேருந்து சேவையை பயன்படுத்தும் ஜொகூர் பாரு மக்களின் நலனுக்காக, my BAS 50 பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,` என்றார்.

“மலாக்கா, கூச்சிங் மற்றும் கோத்தா கினாபாலு நகரங்களுக்கு இடைவிடாத பேருந்து சேவையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அரசாங்கம் RM150 மில்லியனையும் வழங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.


Pengarang :