ECONOMYMEDIA STATEMENT

MPAJ எம்.பி.ஏ.ஜே. (MPAJ) முயற்சியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மலைச்சரிவு சீரமைப்பு

ஷா ஆலம், மார்ச் 17- பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அம்பாங், ஜாலான் புக்கிட் இண்டா 3/3, முத்தியாரா ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் மலைச்சரிவைச் சீரமைக்கும் பணியை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மேற்கொண்டது.

கற்கள் நிரப்பட்ட கூண்டுகளைக் கொண்ட தடுப்புச் சுவர் அமைப்பது பழுதடைந்த காய்வாய்களை சரி செய்து உள்ளிட்ட பணிகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக நகராண்மைக் கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் எந்நேரத்திலும் விழக்கூடிய அபாயத்தில் சாய்வான நிலையில் காணப்பட்ட  மரங்களும் வெட்டி அப்புறப் படுத்தப்பட்டதாக அது  மேலும் தெரிவித்தது.

பொதுமக்களின் பாதுகாப்பை கருதியும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அம்பாங் ஜெயா வட்டாரத்தில் அடிப்படை வசதிகளை தொடர்ந்தாற்போல் சீரமைக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.

இது தவிர, தாமான் அம்பாங் உத்தாமா, ஜாலான் ஆயர் புக்கிட்டில் 50 மீட்டர் நீளத்திற்கு சாலையை விரிவுபடுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 


Pengarang :