NATIONAL

வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 499 கிலோ ஷாபு பறிமுதல்

தானா மேரா, மார்ச் 22- இங்குள்ள கம்போங் வான் அகமட் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றிலிருந்து 1 கோடியே 79 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 499 கிலோ ஷாபு வகை போதைப் பொருளை போலீசார் கைப்பற்றினர்.

நேற்றிரவு 9.30 மணியளவில் கோல திரங்கானு பொது நடவடிக்கைப் பிரிவின் 9 பட்டாளத்தைச் சேர்ந்த வீரர்கள் ஓப்ஸ் வாவாசான் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது ஆடவர் ஒருவர் தாம் ஓட்டி வந்த வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு அருகிலுள்ள புதரை நோக்கி ஓடியதாக கிளந்தான் மாநில துணைப் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மான் ஆயோப் கூறினார்.

அந்த வேனை சோதனையிட்ட போது துணிக் குவியலுக்கு மத்தியில் 13 வெள்ளை நிற மூட்டைகளில் ஷாபு போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த து கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் விநியோகிக்கும் நோக்கில் மலேசியா- தாய்லாந்து எல்லையிலுள்ள சட்டவிரோத வழித் தடங்களில் இந்த போதைப் பொருள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என நம்ப ப்படுகிறது என்று அவர் இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த போதைப் பொருள் பறிமுதல் தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :