ACTIVITIES AND ADSECONOMY

மகளிர் தினத்தை முன்னிட்டு சுகாதார நிகழ்ச்சிகள்

கோல சிலாங்கூர் மார்ச் 22 ; மகளிர் தினத்தை கொண்டாடும் வண்ணம்  கோல சிலாங்கூர் நாடாளுமன்றமும்  நகராட்சியின் (zon 8) இணைந்து சுகாதார திட்ட கண்காட்சியை புக்கிட் ரோத்தான் பாலாய் ராயா திடலில்   நடத்தியது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்த கோல சிலாங்கூர் நாடாளுமன்ற  உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் சூல்கிப்லி  மாநில மற்றும் மத்திய அரசுகள்  குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு குறிப்பாக தோட்டப்புற  மற்றும்  கிராமப்புற மக்கள் மற்றும் ,  பி 40  பிரிவு  மக்களுக்கும்  வழங்கும் பல்வேறு  சமூக உதவித் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

பொது மக்கள்  கலந்துகொள்ள நடத்தப்பட்ட இந்நிகழ்வில்  பாமர மக்கள் பயனடைய வேண்டும் என்ற ஒரே நல்ல  நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்நிகழ்வில் அரசு சார இயக்கத்தில் உள்ளவர்கள்  கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கியதுடன், தங்கல்  சேவைகளை  சிறப்புற வழங்கினர்.

இந்நிகழ்வில் மருத்துவ முகாம், முக ஒப்பனை மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களுக்கும், தனித்து வாழும் தாய் மார்களுக்கும் மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் வழங்கும்  உதவித் திட்டங்கள் பற்றியும் விளக்கப்பட்டது.    இதில்  பல்வேறு  வயது மற்றும் பிரிவு தாய்மார்கள்,  உதாரணமாக  60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான (usia emas smun) சலுகைகளை   பெற எங்கே எப்படி அணுகவேண்டும், சலுகைகளை எப்படி நாம் பெறலாம், என்ற விவரங்களும்  பகிரப்பட்டன.

பயன்படுத்திய சமையல் எண்ணெய் வீணே  கால்வாய்களில்  வீசுவதையும் சுற்றுப்புற மாசுபாடுகளை  களைய  அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிறு பணம் கொடுத்து வாங்கினார்கள்.

நிகழ்வின் இறுதி அங்கமாக  கோலசிலாங்கூர்  நகராண்மைகழக உறுப்பினர் திருமதி நந்தகுமாரி சிங்காரம் (Ketua wanita) அங்கு வந்திருப்பவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி,  அரசாங்க திட்டங்களில் மக்கள்  பயன்பெறும் வகையில்  பல சிறந்த திட்டங்களை அரசாங்கம் வழங்கி உள்ளதை பற்றி  அறிந்து கொண்டீர்கள். ஆனால் அதை நாம்  எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.

அது குறித்து  உங்கள் குடும்பத்தினருடன். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  சில திட்டங்கள்  உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால்  நம் சமுதாயத்தை சார்ந்த மற்றவர்கள் பயன் பெறட்டும்   அவர்களிடம்  இது குறித்து  பேசுங்கள் என  மாவட்ட மன்ற உறுப்பினரும்  (ketua wanita ) மகளிர் தலைவியுமான திருமதி : நந்தகுமாரி சிங்காரம் அவர்கள்.கேட்டுக் கொண்டார்.


Pengarang :