NATIONAL

ஐடில்பிஃத்திரி பண்டிக்கையை  முன்னிட்டு 30 பொருட்கள்  விலை கட்டுப்பாட்டு திட்டத்தில் 

கோலாலம்பூர், மார்ச் 29: ஐடில்பிஃத்திரி கொண்டாட்டக் காலம் முழுவதும் பண்டிக்கை கால விலைக் கட்டுப்பாட்டு  திட்டத்தின் கீழ் (SHMMP)  கீழ் மொத்தம் 30 பொருட்களை அரசிதழில் வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப், இந்த விவகாரம் அனைத்து தொழில்துறை முனைவோர். குறிப்பாக மூலப்பொருட்கள், கட்டுப் படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் அடிப்படை பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடன் முழுமையாக விவாதிக்கப்படும் என்றார்.

பண்டிக்கை கால அதிகபட்ச விலை திட்டம் பண்டிக்கைக்கு ஏழு நாட்களுக்கு முன்பு, பண்டிக்கை நாட்களின் போது மற்றும் பண்டிக்கை முடிந்த ஏழு நாட்களுக்குப் பிறகு செயல்படுத்த வேண்டும் என்று முன்மொழியப் பட்டதாகவும், அடுத்த வாரம் இந்த விஷயத்தை அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் பண்டிக்கை கால அதிகபட்ச விலைத் திட்டத்தை சீனப் புத்தாண்டு 2023 போது ஜனவரி 15 முதல் 29 வரை செயல்படுத்துவதற்காக மொத்தம் எட்டு வகையான பொருட்களை அரசிதழில் வெளியிட்டது.

– பெர்னாமா


Pengarang :