ஷா ஆலம், மார்ச் 25: இந்த மார்ச் மாதத்தில் இதுவரை யயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) பல்வேறு கடன் நிதித் திட்டங்கள் மூலம் மொத்தம் 4,253 இந்திய தொழில் முனைவோர் பலன்களைப் பெற்றுள்ளனர்.
ஐ- பிசினஸ் (i-Bisnes), ஜீரோ டூ ஹீரோ (Zero to Hero),நியாகா டருள் ஏசான் (Niaga Darul Ehsan) நாடி(NaDI), கோ டிஜிட்டல் (Go Digital),ஐ-லிஸ்தாரி( i-Lestari,) ஐ- அக்ரோ (i-Agro) மற்றும் ஐ-பெர்முசிம் (I-Bermusim). , ஆகிய ஏழு திட்டங்களின் மூலம் வணிகங்களை மேம்படுத்த சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு RM 52 மில்லியனுக்கும் அதிகமான நிதி விநியோகிக்கப் பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக செயல் அதிகாரி தெரிவித்தார்.

“இந்த முயற்சியானது வருமானம் ஈட்டுவதற்கு, திறமையான குறுந்தொழில் முனைவோராக மாறுவதற்கும் அவர்களுக்கு உதவுகிறது, இதன் மூலம் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மாநிலத்தின் விரைவான முன்னேற்றத்திற்கு ஏற்ப இந்திய சமூகத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.
“45 சதவீத ஆண்கள் மற்றும் 55 சதவீத பெண்களைக் கொண்ட இந்த தொழில் முனைவோர் குழுவிற்கு இதுவரை 5,645 நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,” என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது நார்மைசா யாஹ்யா கூறினார்.
2015 ஆம் ஆண்டு நிறுவப் பட்டதில் இருந்து, ஹிஜ்ரா 55,834 தொழில்முனைவோருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை RM710 மில்லியன் ஒதுக்கீட்டில் ஈடுபட்டுள்ளது, இதில் வணிக மூலதனம் மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்கள் உட்பட.
கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சமர்ப்பித்த சிலாங்கூர் பட்ஜெட் 2023 இல் ஹிஜ்ரா திட்டத்தை மேம்படுத்தவும், தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கு உதவவும் RM 130 மில்லியன் ஒதுக்கப் பட்டது.
மக்களைக் கவனித்துக்கொள்வதற்கான முன்முயற்சியின் கீழ் நிதியுதவி பெற http://mikrokredit.selangor.gov.my/e-hijrah/login மற்றும் www.hijrahselangor.com என்ற இணைப்பில் மேலும் தகவலுக்கு விண்ணப்பிக்கலாம்