HEALTHSELANGOR

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 43 குழந்தைகள் அனாக் சிலாங்கூர் சத்துணவு உதவியைப் பெற்றனர்

ஷா ஆலம், ஏப்ரல் 11: புக்கிட் மெலாவத்தி தொகுதியில் மொத்தம் 43 குழந்தைகள் அனாக் சிலாங்கூர் அனாக் சிஹாத் (ASAS) திட்டத்தின் மூலம் சத்துணவு   உதவியைப் பெற்றனர்.

அத் தொகுதி சட்டமன்ற  உறுப்பினர்  ஜுவாரியா சுல்கிப்லி, கடந்த ஆண்டு டிசம்பரில் ஐந்து வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளை இலக்காகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப் பட்டது. ஒவ்வொரு பெறுநரும் ஆறு மாதங்களுக்கு கண்காணிக்க படுவார்கள்.

“பால், தானியங்கள், பிஸ்கட் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் கொடுத்து ஆறு மாதங்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

“சிலாங்கூர் குழந்தைகள் வளர்ச்சியில் முழுமையான ஊட்டச்சத்தைப் பெறுவதையும், மூளை மற்றும் உடல் வளர்ச்சி குன்றுவதைத் தடுக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

பொது சுகாதார எஸ்கோ டாக்டர் சித்தி மரியா மாமுட், RM500,000 ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு மொத்தம் 2,800 குழந்தைகள் பயன் பெறுவார்கள் என்று முன்பு தெரிவித்திருந்தார்.


Pengarang :