ECONOMYMEDIA STATEMENTPBT

கோல சிலாங்கூர்  திறந்த இல்ல உபசரிப்பு 10,000 விருந்தினர்கள் கலந்து கொள்ள கலகலப்பாக இருந்தது,

கோலா சிலாங்கூர், மே 13: கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி டூர் (ஜேகேஎஸ்ஏ)  திறந்த இல்ல உபசரிப்பு  இன்று சுமார் 10,000 விருந்தினர்களின் வருகையுடன் கலகலப்பாக இருந்தது.

இங்குள்ள புக்கிட் படோங் பொது மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரது மனைவி டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முஹமட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி இரவு 8.00 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெற்றது. வருகையாளர்களுக்கு  ஜாவானியர்களின் பாரம்பரிய உணவான பன்டெங் உட்பட பல்வேறு உணவு வகைகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில மந்திரி புசார் அமிருடின் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு டுயூட் ராயா (பண அன்பளிப்பு) வழங்கினார்.  வருகையாளர்கள் சுவைமிக்க உணவுடன்  மூத்த கலைஞர் டத்தோ ஹேல் அமீர், ஸ்கோர் குழுவினர் மற்றும் வாரிசான் தஞ்சோங் காராங் காம்பஸ் ஆகியோரின் இயல் இசை நிகழ்ச்சிகளினால்  மகிழ்விக்க பட்டனர்.

மேலும், மாநிலச் செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம், கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி  அகமது, புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாரியா சூல்கிப்ளி மற்றும் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அமாட் , பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனல் அபிடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை கோம்பாக்கில் உள்ள அப்டவுன் ஸ்ரீ கோம்பாக் தளத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ள  JKSA   விருந்து நிகழ்வுடன்  மாநில அளவிலான  இவ்விருந்து நிறைவு பெறும்.

முன்னதாக, அனைத்து தரப்பு மக்களும் மாநில தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பை வழங்கிய முயற்சிகளில் ஒன்று என இதை வர்ணித்தார் டத்தோ ஸ்ரீ அமிருடின். இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதில் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும், ஒரு மாவட்டத்தில் அதை வெற்றியடையச் செய்வதற்காக அரசு RM200,000 ஒதுக்கியது என்றும் அவர் விளக்கினார்.


Pengarang :