ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

இன ஒற்றுமை சிலாங்கூர் மாநிலத்தின் விலை மதிப்புமிக்க சொத்து- டாக்டர் சித்தி மரியா கருத்து

ஷா ஆலம், மே 27- சிலாங்கூர் மாநிலத்தில் வசித்து வரும் பல்லின மக்களிடையே காணப்படும் ஒற்றுமை மாநில மேம்பாட்டிற்கு விலை மதிப்புமிக்கச் சொத்தாக விளங்குகிறது.

இனத்துவேஷத்தை தூண்டுவதற்கு சில தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்கு  ஏதுவாக இந்த ஒற்றுமை தொடர்ந்து கட்டிக் காக்கப்பட வேண்டும் என்று ஒற்றுமைத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

பல்லின மக்கள் வசிக்கும் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. எல்லா இனங்களையும் உள்ளடக்கிய இந்த மாநிலம் ஒரு மினி மலேசியாவாக திகழ்கிறது.

ஆகவே, நாம் இம்மாநிலத்தில் ஒற்றுமையை தொடர்ந்து நிலைநாட்டி வர வேண்டும். ஒற்றுமை என்பது சக்தியின் அடையாளம் என்பதால் இன விவகாரங்களுக்கு தூபம் போட முயலும் தரப்பினரை நாம் நிராகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இங்குள்ள தாமான் தாசேக்  ஷா ஆலமில் இன்று நடைபெற்ற மாநில நிலையிலான ஒற்றுமை வாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காலை 7.00 மணி முதல் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒற்றுமை ஓட்டம், கலாச்சார நிகழ்வு உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெற்றன. இந்த நிகழ்வில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :