MEDIA STATEMENTSAINS & INOVASI

தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் நிதியுதவி

பெட்டாலிங் ஜெயா, மே 27– கிளானா ஜெயா எஸ்எஸ்5ஏ/15 சாலையில்  நிகழ்ந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்    என்று        ஸ்ரீ செத்தியா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

இந்த நிதியுதவிக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக அந்த வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான அறிக்கையை  மாவட்ட,   நில அலுவலகத்திற்கு  தாம் அனுப்பவுள்ளதாக ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

இந்த உதவித் தொகை ஆயிரம் வெள்ளிக்கும் அதிகமாக இருக்கும் என கருதுகிறேன். எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது சம்பந்தப்பட்ட குடுமபத்தினரிடம் தெரிவிக்கப்படும்   என அவர் சொன்னார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ.) மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் (எம்.பி.பி.ஜே.) சார்பில் உதவி நிதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எம்.பி.ஐ. சார்பில் 3,000 வெள்ளி மற்றும் எம்.பி.பி.ஜே. சார்பில் 3,000 வெள்ளியோடு உணவுப் பொருள்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.

கடந்த 19ஆம் தேதி ஏற்பட்ட இந்த தீவிபத்துக்குப் பின்னர் தமது தரப்பின் சார்பில் தொடக்க கட்டமாக கணிசமான தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்


Pengarang :