EKSKLUSIFMEDIA STATEMENT

இன்று சிறுவர் பாடல் திறன் போட்டியில் பத்து  சிறந்த பாடகர்கள் கடும் போட்டி

செய்திகள் சுப்பையா சுப்ரமணியம்

முன் வந்த செய்திகள்

கிள்ளான், மே 28-  இன்று மாலை 4.00 மணிக்கு  கிள்ளான்  டேவான் ஹம்சாவில்  சிறப்பாக   தொடங்கிய சிறுவர் பாடல் திறன் போட்டியில்  ஐவர் ஆண்களும், ஐந்து பெண்களுமாக   பத்து  சிறந்த பாடகர்கள் இறுதி சுற்றுக்கு  தேர்வாகினர்.  இறுதிச்சுற்று போட்டியாளர்களின்  விறுவிறுப்பான படைப்புகளுடன்  நடைபெற்றது,

குத்து விளக்கேற்றி தமிழ் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய  நிகழ்வு பரதநாட்டிய படைப்புடன் களை கட்டியது.
கிள்ளான் செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரப் பாடல் திறன் போட்டி மாநில அரசின் ஒத்துழைப்புடன் இரண்டாம் ஆண்டாக நடைபெறுகிறது.  இந்த  போட்டிக்கு சிலாங்கூர் தமிழ் கலைஞர் இயக்கம் ஏற்பாடு ஆதரவு வழங்கியுள்ளது.

இவ்வாண்டு இந்த போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட 130 போட்டியாளர்களில்  இருந்த அரையிறுதிச் சுற்றுக்கு  22 போட்டியாளர்கள் தேர்வாகி இருந்த நிலையில் அவர்களில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவோரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி  2 வாரங்களுக்கு முன்  இங்குள்ள தெங்கு கிளானா இ-லைப்ரரியில் நடைபெற்றது.

இன்று இந்த போட்டியின் நடுவர்களாக  மூத்த கலைஞர்கள்   பலகுரல் மன்னன்  சண்முகனாதன்.
பாபு  லோகநாதன் , திருச்சி லோகநாதன்  அவர்களின் புதல்வர், இசை கலைஞர் நல்லதம்பி  ஆகியோர்  சிறந்தவர்களை தேர்ந்தெடுக்கும் சிக்கலான பணியை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு  உதவியாக பல மூத்த கலைஞர்கள் கடந்த பல வாரங்களாக சுறுசுறுப்பாக பணியாற்றி வருவதாக ஏற்பாட்டு குழுவினர் தெரியப்படுத்தினர்.

அவர்களில்  மூத்த கலைஞர்கள்  டி.எம். எஸ். சிவகுரு, அல்லிமலர், டாக்டர் ரவிசந்திரிகா சுப்பையா, நல்லத்தம்பி  ஆகியோர் பணியாற்றினர். இறுதிச் சுற்றுக்கு  தேர்வாகியுள்ள பத்து போட்டியாளர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கு பத்து  கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், அனைவரையும் வரவேற்று,  பல வகையில்  உதவி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும், நம் பிள்ளைகளுக்கு  முறையான பயிற்சி அளித்தால்,  அவர்கள் மகத்தான சாதனை படைக்கக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளவர்கள்  என்பது புலப்படும்.  இளம் தலைமுறையினர் மத்தியில் மறைந்திருக்கும்  கலைத்திறனை வெளிக்கொணரும் நோக்கில் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டதாக தெரிவித்தார்.

கலை சார்ந்த துறைகளில் ஈடுபடுவதன் மூலம் தீய வழிகளில்  செல்வதிலிருந்து விலகி இருப்பதற்கான சூழலை இத்தகைய போட்டிகள்  இளம் பிராயத்தினருக்கு வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு  சிறப்பு வருகையாளர்களாக  வணிகர் திரு. ஓம்ஸ் தியாகராஜன் , கிள்ளான் நாடாளுமன்ற  தொகுதியின் முன்னாள் உறுப்பினர்  திரு சாள்ஸ் சந்தியாகு  மற்றும் பல நகராண்மைக் கழக  உறுப்பினர்கள் மற்றும்  இந்திய சமூகத் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Pengarang :