SELANGOR

சட்டவிரோத  வாகனப் பழுது பார்க்கும் பட்டறைக்கு இடிப்பு நோட்டீஸ்

 ஷா ஆலம், ஜூன் 2: சுபாங் ஜெயா வில் சட்டவிரோதமாக இயங்கி வரும் வாகனப் பழுது பார்க்கும் பட்டறை ஒன்றுக்கு கடந்த திங்கட்கிழமை ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் சுபாங் ஜெயா நகராண்மை  கழகம் இடிப்புகான நோட்டீஸ் வழங்கியது.

அந்த வளாகம், பொது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில்,  அது மறுசுழற்சி (ஸ்கிராப் மெட்டல்) பட்டறையாகவும் செயல்பட்டு வந்ததுடன், அதன் உரிமையாளர் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

“சுபாங் ஜெயா நகராண்மை கழகம் சாலைகள், வடிகால் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 (சட்டம் 133) பிரிவு 70 இன் கீழ் நான்கு உடனடி இடிப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் அனுமதியின்றி பொது இடங்களில் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதும் ஒரு குற்றமாகும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு பல்நோக்கு வாகனங்கள் (எம்பிவி) மற்றும் ஒரு லாரி உட்பட பல்வேறு பொருட்கள், கேஸ், ஹைட்ராலிக் ஜெட்கள், இரும்பு கட்டர்கள் மற்றும் பழைய உலோகம் உள்ளிட்ட கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

“அனுமதியின்றி அரசு நிலத்தை ஆக்கிரமித்தது, அந்த வளாகத்தின் உரிமையாளர், தேசிய நிலச் சட்டத்தின் (கேடிஎன்) பிரிவு 425 இன் கீழ் பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகத்தால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்,” என்று அவர் கூறினார்.

சுபாங் ஜெயா SS13 ல் நடந்த அமலாக்கத் துறையின் இந்த கூட்டு நடவடிக்கை, கட்டிடத் துறை, சுபாங் ஜெயா நகராண்மை கழக கார்ப்பரேட் மற்றும் மூலோபாய மேலாண்மை துறை, பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகம் மற்றும் சன்வே சிட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :