SELANGOR

குறைந்த கார்பன்  இலக்கை  2030 ஆம் ஆண்டுக்குள் எட்ட மாநில அரசு  இலக்கு   

ஷா ஆலம், ஜூன் 2: 2030ஆம் ஆண்டுக்குள் குறைந்த கார்பன் நகரம் என்ற இலக்கை அடைய ஆறு பொது வாகனங்கள் மற்றும் நான்கு தனியார் வாகனங்களைப் பயன்படுத்த மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.

12வது மலேசியா திட்டத்தில் (RMK12) மாநிலத்தில் முக்கிய திட்டத்தின் மூலம் பொது போக்குவரத்து வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“2030 ஆம் ஆண்டிற்குள் பொது வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களின் பயன்பாட்டின் விகிதம் 6:4 என்ற இருக்க வேண்டும் என்று அரசு இலக்கு வைத்துள்ளது. இது தற்போதைய நிலைமையில் இருந்து முழுமையாக வேறுபட்டது.

“இதற்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு தேவை. மேலும் போக்குவரத்தைச் சமாளிக்கவும், குறைந்த கார்பன் நகர இலக்கைப் பூர்த்தி செய்யவும் ஒரு விரிவான திட்டம் தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார். .

மத்திய அரசு மாநிலத்தின் வடக்கு மண்டலத்தில் போக்குவரத்து உள்கட்டமைப்பு உருவாக்கி மக்களுக்கு வசதிகளை அதிகரிக்க முடியும் என்று மாநில அரசு நம்புகிறது என்று அமிருடின் மேலும் கூறினார்.

மேலும், கிள்ளான் தொடங்கி சபாக் பெர்ணம் வரையுமான பகுதியும், சிலாங்கூரின் வடப்பகுதி இன்னும் ரயில் சேவையுடன் முழுமையாக இணைக்கப்படவில்லை. RMK 12இல் இல்லையெனில் RMK 13 இல் அரசாங்கம் அதை வடிவமைக்கலாம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :