SELANGOR

ஏப்ரல் வரை 3.91 கோடி வெள்ளி மதிப்பீட்டு வரியை எம்.பி.ஏ.ஜே. வசூல் செய்தது

ஷா ஆலம், ஜூன் 2- இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி
வரை 3 கோடியே 91 லட்சம் வெள்ளி மதிப்பீட்டு வரியை அம்பாங் ஜெயா
நகராண்மைக் கழகம் (எம்.பி.ஏ.ஜே,) வசூல் செய்துள்ளது.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தை விட இவ்வாண்டில் 0.46 விழுக்காடு
அல்லது 1 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி கூடுதலாக
வசூலிக்கப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அனி
அகமது கூறினார்.

இவ்வாண்டின் அதே காலக்கட்டத்தில் நிலுவையில் இருந்த வரித்
தொகையில் 69 லட்சம் வெள்ளியை தாங்கள் வசூலித்துள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் இங்குள்ள மெனாரா எம்.பி.ஏ.ஜே.வில் நடைபெற்ற
நகராண்மைக் கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்திற்கு தலைமையேற்று
உரையாற்றிய போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

மதிப்பீட்டு வரி வசூல் நகராண்மைக் கழகத்தின் வருடாந்திர வரவு
செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இவ்வாண்டின் முதல் தவணையின் போது 129,009 மதிப்பீட்டு வரி பில்கள்
வெளியிடப்பட்ட வேளையில் 1 கோடியே 70 லட்சம் வெள்ளி வரி
பாக்கியை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்
தெரிவித்தார்.


Pengarang :