ECONOMYMEDIA STATEMENT

பிளாஸ்டிக் பைக் கட்டணமாக RM617,729.98 வசூல்

ஷா ஆலம், ஜூன் 2: மே 23 வரை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் பிளாஸ்டிக் பைக் கட்டணமாக RM617,729.98யை வசூலித்துள்ளது.

20 சென் பிளாஸ்டிக் பை சேகரிப்பு திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 753 கடைகள் அக்கட்டணத்தை வசூலித்ததன் விளைவாக இந்த சேகரிப்பு கிடைத்ததாக அம்பாங் ஜெயா நகராண்மை கழகத் தலைவர் டாக்டர் அனி அஹ்மட் கூறினார்.

வருவாயில் மொத்தம் 60 சதவீதம், அதாவது RM370,637.99, மாநில அரசிடம் ஒப்படைக்கப் படும். “மேலும், 40 சதவீதம் (RM247,091.99) கழகத்தின் அறக்கட்டளை கணக்கில் சேர்க்கப் படும்,” என்று அவர் நேற்று அம்பாங் ஜெயா நகராண்மை கழகக் கூட்டத்தில் கூறினார்.

கடந்த ஆண்டு, அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் பிளாஸ்டிக் பைக் கட்டணமாக RM1,046000 வசூலித்தது, அதில் 60 சதவீதம் அல்லது RM627,784.55 மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது, மீதமுள்ள 40 சதவீதம் (368,811.95) அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் அறக்கட்டளை கணக்கில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 


Pengarang :