MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் மாநிலம்  அனைவருக்குமானது  இங்கே இனவாதம் ஜெயிக்காது.

கிள்ளான்.ஜூன்.2- அனைத்து சமூகத்தையும் ஒன்றிணைத்து ஒற்றுமையாக கடந்த 15 ஆண்டுகளாக முன்னேற்றகரமாக நிர்வகித்து வருகிறோம். இங்கு நாட்டில் உள்ள எல்லா மாநிலத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். வேலை தேடி வந்துள்ளனர். இங்கிருந்து பொருள் ஈட்டி செல்கின்றனர். அந்த அளவிற்கு பொருளாதார வலிமையுடன் திகழ்கிறது. நாட்டின் வருவாயில் 25% சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து கிடைக்கிறது என்று நேற்று செந்தோசா சட்டமன்ற நற்சேவையாளர்கள் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சியில் தலைமையேற்று உரையாற்றுகையில் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து சமூகத்தினரையும் ஒற்றுமையாக  அரவணைத்து சிறப்பாக வழி நடத்திய சாதனை நமக்குண்டு. எந்த சமூகமும் விடுபடாமல், ஓரங்கட்டப் படாமல் இருப்பதை நாம் உறுதி செய்துள்ளோம்.

குறிப்பாக ஆண்டு தோறும் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளி, சீன பள்ளிகள் என்று எல்லாப் பள்ளிகளுக்கும் 15 ஆண்டுகளாக தடையின்றி மானியம் வழங்கி வருகிறோம். இதே போல் சிலாங்கூரில் உள்ள எல்லா மத வழிப்பாடு தளங்களுக்கும் மானியம் வழங்கி வருகிறோம். மத வேறுபாடு, இன வேறுபாடு காட்டாமல் ஒற்றுமையாக சிலாங்கூர் மாநிலத்தை நேர்மையாக வழி நடத்தி வருகிறோம்.

நான் மந்திரி புசாராக பொறுப்பு ஏற்ற ஓர் இரு ஆண்டுகளில் கோவிட் – 19 பெருந்தொற்று தாண்டவம் ஆடியது. இந்தப் பெருந்தொற்று நமக்கு நல்லதொரு பாடத்தை  புகட்டியுள்ளது. இந்த அவசர கால கட்டத்தில் ஒருவர் கூட கைவிட கூடாது என்பதில் சிலாங்கூர் மாநில  தீவிரமாக செயல் பட்டது.

சிலாங்கூரில் யாரும் முதல் தர குடிமக்கள் இரண்டாம் தர மக்கள் என்று வேறுபாடு காட்டப்படுவதில்லை. இங்கு அனைவரும் சமம். ஆனால்  எதிர்க்கட்சிகள் இனத்துவேசத்துடன் எதிர் வரும் மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும், அதனை நாம் முறியடிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் இந்த இனத்துவேச அரசியல் சிலாங்கூரில் இனியும் எடுபடாது என்று மந்திரி புசார் கூறினார்.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக் கடன் உதவியை விடாமல் செய்து வருகிறோம். தொடர்ந்து இடை நிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் இது போன்ற  சேவை செய்யவிருக்கிறோம்.

சிலாங்கூரில் எல்லா பொருளாதார திட்டங்களும் வெற்றி கரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எல்லாத் திட்டங்களும் மக்களுக்கு முறையாக சென்று அடைவதை மந்திரி புசார் முதல் அடிமட்ட நிலைத் தலைவர்களான கே.கே.ஐ. ( இந்திய சமுதாய தலைவர்கள், கிராமத் தலைவர்கள் வரை உறுதி செய்து வருகின்றனர்.

தற்போது சிலாங்கூர் மாநிலத்தை மாற்றப்போவதாக எதிர்க்கட்சிகள் விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படி மாற்றப் போகிறார்கள் கெடாவை  போன்ற அல்லது கிளாந்தான் மாநிலத்தை போன்றா என அவர் கேள்வி எழுப்பினார்.

இப்படி பட்ட விஷமப் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் மலாய்க்காரர்களிடம் செய்து வருகிறது  என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் உள்ள அனைவருக்கும் தங்களது சிறப்பான சேவையை பாகுபாடின்றி வழங்கி வருகின்றனர். நமது தலைவர்கள் தொடர்ந்து மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநிலம் வெள்ளப் பிரச்சனையிலிருந்து மீண்டு வருகிறது.  இதே போல் குடிநீர் விநியோக பிரச்சனைகள்  வெற்றி கரமாக தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது வரையில் இப்பிரச்னையில் 70%  முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது முறையான தீர்வு காணப்பட்டு வருகிறது.

கடந்த 15 வருடமாக நாம் ஆற்றி வரும் மகத்தாண சேவையை  தொடர்ந்து நிலைநாட்ட நாம் அனைவரும் தீவிரமாக செயல் பட வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.


Pengarang :