NATIONAL

சட்டவிரோதமாக இயங்கி வந்த லாரி பட்டறை இடிக்கப்பட்டது – சுபாங் ஜெயா மாநகராட்சி

சுபாங் ஜெயா, ஜூன் 6: இன்று இங்குள்ள SS13/1 அடுக்குமாடி குடியிருப்பின் பின்னால் சட்டவிரோதமாக இயங்கி வந்த லாரி பட்டறையைச் சுபாங் ஜெயா மாநகராட்சி இடித்தது.

அடுக்குமாடி குடியிருப்பின் பின்னால் உள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான பொது புகார் மற்றும் அமலாக்க மதிப்பீட்டை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாகச் சுபாங் ஜெயா மாநகராட்சியின் கார்ப்பரேட் மற்றும் மூலோபாய நிர்வாகத்தின் இயக்குனர் தெரிவித்தார்.

“எனவே, சுபாங் ஜெயா மாநகராட்சி, பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கி வந்த லாரி பட்டறை ஒன்றை இடிக்கும் நடவடிக்கை எடுத்தது. அதற்கு முன் இவ்விட  நடவடிக்கை  குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டாம் என்று குடியிருப்பாளர்கள் அச்சுறுத்தப் பட்டதாகத் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

ஊராட்சி மன்ற “கட்டிட கால்வாய் சட்டம் 1974 (சட்டம் 133) இன் கீழ் உடனடியாக  அப்புறப்படுத்தும் அறிவிப்பை சுபாங் ஜெயா மாநகராட்சி வழங்கியுள்ளது. ஆனால் இடிப்பு நடவடிக்கை எடுக்க படுவதற்கு முன்பு அவ்விடத்தை சுத்தம் செய்ய நாங்கள் அவகாசம் வழங்கினோம்” என்று முஹம்மது அஸ்லி மிஸ்வாட் கூறினார்.

மேலும், அரசுக்கு சொந்தமான நிலத்தில் கட்டிடங்கள் கட்டவோ, வியாபாரம் செய்யவோ கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தினார்.

“அனைவரது வசதிக்காக அரசுக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோத கட்டிடங்களை கட்டாமல், அப்பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று சுபாங் ஜெயா மாநகராட்சி நம்புகிறது.

“இந்த நடவடிக்கைக்குப் பிறகு, கழிவுகளைச் சுத்தப்படுத்தவும், குடியிருப்பாளர்களைப் பாதிக்காத வகையில் குப்பைகளை அகற்றவும் KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) மற்றும் சுற்றுச்சூழல் துறையின் ஒத்துழைப்பை நாங்கள் கேட்போம்,” என்று அவர் கூறினார்.

அதே நடவடிக்கையில் ரோல்-ஆன் ரோல்-ஆஃப் (RORO) தொட்டியைக் கைப்பற்றியதுடன், சேமிப்பு அறை, கேரேஜ், கோழி கூண்டு ஆகியவையும் இடிக்கப்பட்டன.

பெட்டாலிங் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகம், எம்பிஎஸ்ஜே கட்டிடத் துறை மற்றும் காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மே 29 அன்று, சுபாங் ஜெயா மாநகராட்சி வாகனப் பட்டறை இடிப்பு அறிவிப்பை வெளியிட்டது. மேலும், அது ஆறு பல்நோக்கு வாகனங்கள் (MPVக்கள்), ஒரு லாரியின் முன்பகுதி மற்றும் பல்வேறு பட்டறை பொருட்களை பறிமுதல் செய்தது.


Pengarang :