SELANGOR

குப்பைகளைச் சேகரிக்கும் துப்புரவு பணியோடு உடல்பயிற்சி நடவடிக்கையில் (குடா) 175 பேர் கலந்து கொண்டனர் – அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூன் 6: கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமான் கோசாஸ், ஜாலான் கோசாஸ் 1/1 இல் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தால் (எம்பிஏஜே)  ஏற்பாடு செய்திருந்த குப்பைகளைச் சேகரிக்கும் துப்புரவு பணியோடு உடல்பயிற்சி நடவடிக்கையில் (குடா) 175 பேர் கலந்து கொண்டனர்.

அம்பாங் ஜெயா ஸ்மார்ட் சிலாங்கூர் மாம்பன் குழுவின் (SSM) கீழ் உள்ள  அத்திட்டம் ஆற்றின் தூய்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என மக்கள் தொடர்பு பிரிவு மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகச் செயலகம் தெரிவித்தது.

இந்த நடவடிக்கையில் சேகரிக்கப்பட்ட குப்பைகளைக் கொண்டு செல்ல இரண்டு ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (ரோரோ) லாரிகள் பயன்படுத்தப்பட்டன,” என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நலன்புரி எஸ்கோ மற்றும் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத் தலைவர் டாக்டர் அனி அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலு லங்காட் மாவட்ட நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS), சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS), “Indah Water Konsortium Sdn Bhd“, KDEB கழிவு மேலாண்மை மற்றும் இக்ரம் லெம்பா ஜெயா ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவினர்.

முன்னதாக, இதே நிகழ்ச்சியானது சுங்கை அம்பாங்கிற்கு அருகிலுள்ள லமன் நியாகா, அம்பாங் வாட்டர்ஃபிரண்ட் மற்றும் கம்போங் மெலாயு அம்பாங் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Pengarang :