HEALTHMEDIA STATEMENT

மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டம் தரம் உயர்த்தப்படும்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஜூன் 8– மாநில அரசினால் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டம் மக்களின் நலன் கருதி தொடர்ந்து தரம் உயர்த்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் சாரிங் எனும் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை இயக்கம் இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக கூறிய அவர், இதன் முதல் கட்ட சோதனை நடவடிக்கையில் 25,000 பேர் வரை பங்கு பெற்று பயனடைந்தனர் என்றார்.

நீரிழிவு, புற்றுநோய், குளுகோமா, கண், பல், காது சோதனை பிஸியோதெராபி உள்ளிட்ட சோதனைகளை இந்த பரிசோதனை இயக்கம் உள்ளடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் நலனுக்காக இந்த இலவச பரிசோதனை இயக்கம் தரம் உயர்த்தப்படும். நாம் அனைவரும் சிறந்த உடலாரோக்கியத்தை உறுதி செய்வோம் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனையில் பங்கு பெற விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்யலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :