SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை நாளை ஒன்பது இடங்களில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 9- அத்தியாவாசிய உணவுப் பொருள்களைக் குறைந்த
விலையில் விற்பனை செய்யும் மாநில அரசின் மலிவு விற்பனை நாளை
மேலும் ஒன்பது இடங்களில் நடைபெறவுள்ளது.

ஜூவாலான் ஏசான் ரஹ்மா எனும் இந்த திட்டம் காஜாங் தொகுதியின்
சுங்கை கந்தான், கோலக் கிள்ளான் தொகுதியின் அர்-ரஹ்மான்
பள்ளிவாசல் வளாகம், ஸ்ரீ செர்டாங் லெஸ்தாரி பெர்டானா சூராவ், பாயா
ஜெரா தொகுதியின் கம்போங் பாயா ஜெராஸ் ஹிலிர், கின்ராரா
தொகுதியின் பண்டார் கின்ராரா சமூக மண்டபம் ஆகிய இடங்களில்
நடைபெறவுள்ளது.

இது தவிர சுங்கை தொகுதி நிலையிலான மலிவு விற்பனை காஜாங்
உத்தாமாவிலும் பலாக்கோங் தொகுதி நிலையிலான விற்பனை சூராவ்
செராஸ் பிரிமாவிலும் குவாங் தொகுதி நிலையிலான விற்பனை புத்ரி
சென்ட்ரல் பார்க்கிலும் மேரு தொகுதி நிலையிலான விற்பனை தாமான்
இந்தானிலும் நடைபெறும்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.)
நடத்தப்படும் இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்
பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட்
6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

கடத்தாண்டு செம்படம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நடைபெற்ற
இந்த மலிவு விற்பனையின் வழி மாநிலத்திலுள்ள சுமார் 20 லட்சம் பேர்
பயனடைந்தனர். இக்காலக்கட்டத்தில் 1 கோடியே 60 லட்சம் வெள்ளி
மதிப்பிலான விற்பனை பதிவாகியுள்ளது.


Pengarang :