SELANGOR

மேம்பாட்டு இடம் திடீர் வெள்ளம் காரணமாக மூடப்பட்டது

ஷா ஆலம், ஜூன் 9: தாமான் ஸ்ரீ நண்டிங், செமினியில் உள்ள ஒரு  கட்டுமான பகுதி  திடீர் வெள்ளம் மற்றும் சகதி ஏற்படக் காரணமாக இருந்ததால் காஜாங் நகராண்மை கழகம் (எம்பிகேஜே) சமீபத்தில் நில மீட்புக்கான  அமலாக்க   அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது,

இரண்டாவதாக வேலை நிறுத்தம் நோட்டீஸ், அபராதம் மற்றும் RM250,000 மதிப்புள்ள செக்‌ஷன் 71 அடிப்படையில் கட்டிட வடிகால் சாலைச் சட்டம் (AJPB) 1974 இன் கீழ் பழுதுபார்ப்பு உத்தரவு ஆகியவை அந்த  மேம்பாட்டாளர்கள் எதிராக வெளியிடப்பட்டது என்று ஊராட்சி மன்றம்  தெரிவித்துள்ளது.

” சரியான வடிகால் அமைப்பு இல்லை என்பது,  அந்த மேம்பாட்டு திட்டத்திற்கு  வருகை புரிந்த போது தெரிய வந்தது. தாமான் ஸ்ரீ நண்டிகில் வெள்ளம் ஏற்பட  அதுவும் ஒரு காரணம் என கண்டறியப் பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் வசதிக்காகக் தனது தரப்பு குப்பைத் தொட்டிகளையும் அங்கு வைத்துள்ளது என மக்கள் தொடர்பு அதிகாரி கமருல் இஸ்லான் சுலைமான் கூறினார்.

உலு லங்காட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், டுசுன் துவாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் திடீர் வெள்ள பிரச்சனையைத் தீர்க்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.


Pengarang :