கோலாலம்பூர், செப்டம்பர் 21 – RON 97 பெட்ரோலின் சில்லறை விலை லிடடருக்கு 10 சென் என்று அதிகரித்து RM3.47 ஆக அதிகரித்து உள்ளது, அதே நேரத்தில் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை எந்த வித மாற்றமில்லை.
இன்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே லிட்டருக்கு RM2.05 மற்றும் RM2.15 ஆக உள்ளது.
“உலகளாவிய எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, அரசாங்கம் RON95 இன் உச்சவரம்பு விலையை லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் கட்டுப்படுத்தி உள்ளது,” என்று அது கூறியது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலைப் போக்கை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தொடர்ந்து மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.
– பெர்னாமா