ஷா ஆலம், செப்.21: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள செக்சன் 13ல் உள்ள ராஜா துன் உடா நூலகத்தில் கேலிச்சித்திரங்கள் வரையும் பட்டறையில் பொதுமக்கள் பங்கேற்க ஓர் அரிய வாய்ப்பு இதில் பிரபல கார்ட்டூனிஸ்ட் இமுடா கலந்து கொள்கிறார்.
சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தால் (பிபிஏஎஸ்) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பட்டறை, குழந்தைகள், பதின்வயதினர் மற்றும் பெரியவர்கள் உட்பட அனைத்து குழுக்களுக்கும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“செப்டம்பர் 24 அன்று இமுடாவுடன் வண்ண கேலிச் சித்திரங்கள் வரைவதற்கு பதிவு செய்வோம். அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.
“பங்கேற்பாளர்கள் A3 அளவு ஓவியக் காகிதம், 2B பென்சில்கள், வண்ண பென்சில்கள் மற்றும் அழிப்பான்களை மட்டுமே கொண்டு வர வேண்டும்,” என்று முகநூலில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்களுக்கு RM30 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் மேலும் தகவலுக்குப் புவான் நசலீசாவை 019-679 2288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.