SELANGOR

29 அபராத நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஷா ஆலம், செப் 21: கோலா லங்காட் நகராண்மைக் கழகத்தின் (எம்பிகேஎல்) வாகன நிறுத்துமிடம் சம்பந்தப்பட்ட 29 அபராத நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறியதால், தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நபர் ஒருவர் நேற்று ஆஜர்படுத்தப் பட்டார்.

அந்த 20 வயதுக்கு உட்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதைத் தொடர்ந்து செப்டம்பர் 13 அன்று மாஜிஸ்திரேட் கைருல் ஃபஹ்ரி யூசோப் பிறப்பித்த கைது வாரண்டைப் பெற்றார் என கோலா லங்காட் நகராண்மை கழகம் கூறியது.

” கோலா லங்காட் நகராண்மை கழகத்தால் தடைசெய்யப் பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தியதற்காக சாலைப் போக்குவரத்து ஆணை பத்தி 8, (பார்க்கிங் ஒதுக்கீடு) MDKL 2007 இன் குற்றத்திற்காகச் சம்மன் பெற்ற நபர் (OKS) நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிவிட்டார்” என்று அறிக்கை ஒன்றில் மூலம் தெரிவிக்கப் பட்டது.

சம்மன் பெற்ற நபர் அனைத்து நிலுவைத் தொகையையும் (RM430) செலுத்தியதால், கைது வாரண்ட் ரத்து செய்யப் பட்டதைத் தவிர அவரைப் பரோல் (டிஎன்ஏஏ) இல்லாமல் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை கோலா லங்காட் நகராண்மை கழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஹஸ்ரிசல் அப்துட் ரஹீம் மற்றும் வழக்கறிஞர் அஹ்மட் ரசாலி அப்துல் மனாஃப் ஆகியோர் கையாண்டனர்.


Pengarang :