SELANGOR

நதி தூய்மை பாதுகாப்பு கல்வி அறிமுகம் சுற்றுச்சூழல் பராமரிப்பு தொடர்பான பொது விழிப்புணர்வு

கிள்ளான், செப் 21: லாண்டாசன் லுமாயன் (LLSB) உடன் இணைந்து சுற்றுச்சூழலை பராமரிப்பது தொடர்பான பொது விழிப்புணர்வை வளர்ப்பதற்காக சுற்றுலா சிலாங்கூர்  நதி தூய்மை கல்வித் திட்டத்தை ஏற்பாடு செய்தது.

பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்ட இந்த திட்டம், இண்டர்செப்டர் குப்பை சேகரிக்கும் இயந்திரம் மற்றும் குப்பை பொறியின் செயல்பாட்டை பார்க்க கிள்ளான் ஆற்றின் வழியாக அழைத்துச் செல்லும் என அதன் தொழில்துறை மேம்பாட்டு மேலாளர் சுவா யீ லிங் கூறினார்.

”வீட்டில் மட்டுமின்றி, பள்ளியிலும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் வலியுறுத்தப்படுகிறது.

இண்டர்செப்டர் மற்றும் குப்பைப் பொறியின் செயல்பாட்டைக் காண ஊடகங்களுடன் கிள்ளான் ஆற்றைச் சுற்றி பார்த்த பின்னர் யீ லிங் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், ஆற்று தூய்மை குறித்து  அறிந்துக் கொள்ள  மூன்று பேக்கேஜ்கள் கிடைக்கும் என லாண்டாசன் லுமாயன் கார்ப்பரேட் சர்வீசஸ் அதிகாரி (தொடர்பு) சுஹைலா ஷம்சுதின் தெரிவித்தார்.

“10 நபர்களுக்கு RM600 விலையிலும், ஒரு நடுத்தர பேக்கேஜ் RM800 ஆகும் (15 நபர்), அதே நேரத்தில் 20 நபர்கள் ஏறக்கூடிய ஒரு பெரிய படகு RM1,000 ஆகும்.ஆற்றை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது,” என்று அவர் மேலும் கருத்துரைத்தார். 


Pengarang :