NATIONAL

6 வயது சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த கணவன்-மனைவிக்குச் சிறை

கோல பில்லா, செப் 21: இந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை 6 வயது சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணவன்-மனைவி இருவருக்கும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது

சிறுவனின் தந்தை (27) மற்றும் மாற்றாந்தாய் (31), ஒவ்வொருவருக்கும் இரண்டு வருட நன்னடத்தை பத்திரத்திற்கு உட்பட்டு 80 மணிநேரம் சமூகச் சேவை செய்ய நீதிபதி நோர்மா இஸ்மாயில் உத்தரவிட்டார்.

அவர்கள் இருவரும் கடந்த மார்ச் முதல் செப்டம்பர் 12க்கு இடையில் ஜெம்போலில் உள்ள வீடொன்றில் சிறுவனையை உடல் ரீதியாக காயப்படுத்தும் அளவுக்குத் தவறாக நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் மீது குழந்தைகள் சட்டம் 2001 (சட்டம் 611) பிரிவு 31(1)(a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞர் பிரதிநிதித்துவம் செய்யாத நிலையில், அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் பெஹ் ஃபாங் சியால் வழக்குத் தொடரப்பட்டது.

தம்பதியருக்குக் கடுமையான தண்டனை விதிக்குமாறு பொது வழக்கறிஞ்சர் போ  நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார், ஏனெனில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும், தங்களை தற்காத்துக் கொள்ள முடியாத குழந்தைகளைத் துஷ்பிரயோகம்    செய்யக்கூடாது.

“இந்த வழக்கு தீவிரமானது, குழந்தையின் உடல் முழுவதிலும் காயம் ஏற்பட்டு இருப்பதன் காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். கடுமையான தண்டனை பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக அமையும்,” என்று அவர் கூறினார்.

தங்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதால் குறைந்தபட்சத் தண்டனை விதிக்க வேண்டும் என்று தம்பதியினர் நீதிமன்றத்தை நாடினர்.

“நீதிபதி தண்டனையை எளிதாக்குவார் என்று நம்புகிறேன். எனக்கு இன்னும் மூன்று சிறிய குழந்தைகள் உள்ளனர். மன்னிக்கவும், நான் உண்மையில் குற்றவாளி என்று எனக்குத் தெரியும் (நான் என் குடும்பத்திற்குச் சிறந்த கணவராகவும் தந்தையாகவும் இருக்க வேண்டும்)” என்று குழந்தையின் தந்தை கூறினார்.

– பெர்னாமா


Pengarang :